மேற்கு இலண்டனில் உள்ள டியூப் ஸ்டேஷன் அருகே 15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, செல்சியாவில் உள்ள ஸ்லோன் ஸ்கொயர் ஸ்டேஷன் திங்கட்கிழமை பிற்பகல் சற்று நேரம் மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிங்ஸ் வீதியில் உள்ள டியூக் ஆஃப் யார்க் சதுக்கத்தில் விமான ஆம்புலன்ஸ் தரையிறங்குவதைக் X இல் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ காட்டுகின்றது. அத்துடன், அவசர சேவைகள் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்கின்றன.
லோயர் ஸ்லோன் தெருவில் கத்தியால் ஒருவர் குத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பிற்பகல் 3.25 மணிக்குப் பிறகு பொலிஸாரும் துணை மருத்துவர்களும் அழைக்கப்பட்டனர்.
அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானதாக கருதப்படவில்லை என்பதை மெட் பின்னர் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சாட்சிகள் யாரேனும் இருந்தால் முன் வாருங்கள்” என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, விமான ஆம்புலன்ஸ் உட்பட உதவி சேவைகளை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக இலண்டன் ஆம்புலன்ஸ் சேவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Watching @LDNairamb land on Duke of York square was quite a sight: this is a charity, relies completely on our donations. They rushed off to try & save the victim ❤️ donate here https://t.co/ONzWDOlcdl pic.twitter.com/LFg9mglHKQ
— Louise Rowntree (@Louise_Rowntree) October 7, 2024