இரு செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.இணையதள சேவை மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றுக்கா இவற்றை செலுத்தியுள்ளது.
குய்சோ 1 ஏ என்ற ராக்கெட் மூலம் ஜிங்யூன் 2 என்று பெயரிடப்பட்ட 01 மற்றும் 02 செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட்டது.
ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட இரு செயற்கைக் கோள்களும் சரியான நேரத்தில் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. கடல் சூழல் கண்காணிப்பு, மற்ற செயற்கைக் கோள்களின் மேலாண்மை, இணையதள மேம்பாடு போன்றவற்றுக்கு இந்த செயற்கைக்கோள்கள் உதவியாக இருக்கும் என சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.