சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தென்சீனாவின் தாமிரசுரங்கம் ஒன்றில் இருந்து சேகரிக்கப்பட்ட வௌவால் கழிவில் காணப்பட்ட வைரசும், தற்போது பரவி வரும் கொரோனா வைரசும் பெருமளவில் ஒத்துப் போவதாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
யுன்னான் மாகாணத்தில் உள்ள இந்த சுரங்கத்தில் வௌவாலின் கழிவுகளை அகற்றிய 6 பணியாளர்களுக்கு கடுமையான நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு அவர்களில் 3 பேர் இறந்து விட்டதாகவும், வௌவாலின் கழிவில் இருந்த கொரோனாவைசின் தொற்றுதலே இதற்கு காரணம் எனவும் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
வௌவால் குகைகளை ஆய்வு செய்து வௌவால் பெண்மணி என்ற பெயரை பெற்றவரும், வூகான் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் உற்பத்தியானதா என ஆராயும் மருத்துவ விஞ்ஞானியுமான ஷி ஜெங்க்லியும் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த இரண்டு வைரசுகளுக்கும் 96.2 சதவிகித ஒற்றுமை உள்ளதாக அவர் இந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 2013 ல் கண்டுபிடிக்கப்பட்ட வைரசின் எந்த உயிருள்ள வடிவமும் தங்களது ஆய்வகத்தில் இல்லை என்று கூறியுள்ள வூகான் வைராலஜி ஆய்வகம் கொரோனா பரவலுக்கு தாங்கள் காரணமில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.