தஜிகிஸ்தான் நாட்டின் மிக உயரமான இஸ்மோலி சோமனி மலைப்பகுதியில் பயிற்சி மேற்கொண்ட 13 மலையேற்ற வீரர்கள் ஹெலிகொப்டர் மூலம் அடிவார முகாமிற்கு திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
முகாமை நெருங்கியபோது ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்தது அதன் போது விமானி அவசரமாக தரையிறக்க முயன்றுள்ளார். எனினும் ஹெலிகொப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.
இதில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த 13 மலையேற்ற வீரர்கள் மற்றும் 3 விமானிகள் என அனைவரும் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஹெலிகொப்டர் விழுந்த பகுதிக்கு மீட்பு பணிக்காக இரண்டு ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.