இத்தாலியின் ஜெனோவா நகரிலுள்ள அதிவேக நெடுஞ்சாலை பாலம் ஒன்று நேற்று முன்தினம் (14) இடிந்து வீழ்ந்து 39 பேர் பலியாகிய சம்பவத்தையடுத்து, அந்நாட்டு பிரதமர் ஜியௌசெப்பே கொண்டே (Giuseppe Conte) குறித்த அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்துள்ளார்.
இதன்போது 148 அடி உயரத்திலிருந்து பல வாகனங்கள் வீழ்ந்தமையால், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் இன்னும் பலரைக் கண்டுபிடிக்கலாம் என சிறியதொரு நம்பிக்கை இருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துக்கான காரணம் தெரியாதபோதிலும், குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனம் ஒன்றே இதற்குப் பொறுப்பு என விமர்சிக்கப்படுகின்றது.