அவுஸ்ரேலிய செனட் சபையில் இணைந்த முதலாவது முஸ்லிம் பெண் உறுப்பினராக மெஹ்ரீன் ஃபருகி (Mehreen Faruqi)
நியூ சவுத் வேல்ஸின் பசுமைக்கட்சியின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் செனட் உறுப்பினராக ஃபருகி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட ஃபருகி, கடந்த 1992ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் குடியேறினார்.
அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னர் கல்வியாளராக சிறப்படையாளம் பெற்று விளங்கிய ஃபருகி, சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.
2013ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஃபருகி, அவுஸ்ரேலியாவில் அரசியல் அலுவலகம் பெற்ற முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.