ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச்செயலாளரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான கொஃபி அனான், சுகயீனம் காரணமாக இன்று காலமானார்.
உலக அமைதிக்காகத் தொடர்ந்து பாடுபட்டவர் கொஃபி அனான் ஐக்கிய நாடுகள் அவையின் #பொதுச்செயலாளராகப் பதவி வகித்தபோது, உலக அமைதி, நீடித்த வளர்ச்சி, மனித உரிமை ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்தார்.
மனிதாபிமான நடவடிக்கைக்காக நோபல் பரிசையை வென்ற கொபி அனான்,
ஐக்கிய நாடுகள் அவையின் #பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகியவுடன், அவரது பெயரில் தொடங்கப்பட்டுள்ள ‘கொஃபி அனான் அறக்கட்டளை’யின் தலைவராக இருந்து, உலக அமைதிக்காகத் தொடர்ந்து பாடுபட்டார்.
கானாவில் பிறந்த அவர், ஆப்பிரிக்காவின் வளர்ச்சிகுறித்து அக்கறைகொண்டிருந்தார். ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு முயற்சிகளை #முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது