ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, இத்தாலியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தென் இத்தாலியின் கடல் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த படகு விபத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர் என பி.பி.சி அறிக்கையிட்டுள்ளது.
குறித்த படகில் 200க்கும் அதிகமான அகதிகள் இருந்ததாகவும் சுமார் 80 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.