இங்கிலாந்தில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இரு நாடுகளில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளே இவ்வாறு மரக்கறிகளின் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளன.
மலேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
மலேசியாவின் தெற்குப் பகுதியில் ஒரு மில்லியன் கிலோகிராமுக்கு அதிகமான மரக்கறிகள் மழையில் வீணாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதனால் மரக்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை, 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, சிங்கப்பூர் இறக்குமதி செய்யும் மரக்கறிகளில் 42 சதவீதமானவை மலேசியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதனால் சிங்கப்பூரிலும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்தில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு