மு. கருணாநிதியின் உடலை சென்னை மெரீனா கடற்கரையில் நல்லடக்கம் செய்யா சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கு விசாரணைகளைக் காரணம் காட்டி மெரீனாவில் நிலம் ஒதுக்கீடு செய்ய முடியாதென தமிழகத்தின் தலைமைச் செயலாளர் நேற்றிரவு அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை ஆட்சேபித்து திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதேவேளை, முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பாரதப் பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு வருகைதந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மு. கருணாநிதியின் பூதவுடலுக்கு, அரசியல் தலைவர்கள், சர்வதேச நாடுகளின் பிரதிதிநிதிகள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.