இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் எழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந் இதனை தெரிவித்துள்ளார்.
மாநில அரசாங்கத்தின் பரிந்துரை தொடர்பில் மத்திய அரசாங்கம் தீர்மானமொன்றை எடுத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் அந்த தீர்மானத்தை தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் இந்த வழக்கை பல நீதிமன்றங்கள் ஆராய்ந்துள்ளன இவர்கள் சிறைக்கைதிகளை விடுதலை செய்யதேவையில்லை என குறிப்பிட்டுள்ளனர் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை என்பது மிகமோசமான ஈவிரக்கமற்ற செயலாகும்,இந்த ஈவிரக்கமற்ற செயல் காரணமாக இந்திய ஜனநாயகத்தின் நடவடிக்கைகள் முடக்கப்படும் நிலை உருவானது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.