இந்திய கேரளா பகுதியில் கடும் வெள்ள பாதிப்புக்கு உள்ளான நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி இந்திய ரூபாய்களை நிதி உதவியாக வழங்க முன்வந்துள்ளது.
மாநில முதல்வர் பினராயி விஜயன் இதனைத் தெரிவித்துள்ளார். கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள கேரளாவை mindum கட்டியெழுப்ப இந்த நிதி உதவி அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் பேர் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே பணிபுரிகின்றனர். அந்த நாட்டின் 30 சதவீத மக்கள் இந்தியர்களாகவே உள்ளனர்.
இந்தநிலையில் ஐக்கிய அரபு அமீரகம் முதல் நாடாக கேரளாவுக்கு உதவி கரம் நீட்டியுள்ளது. இந்தியாவின் மத்திய அரசு ரூ.500 கோடி நிதிஉதவியாக கேரளாவுக்கு அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி கொடுப்பதாய் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.