13 பொலிஸாருக்கு பொலிஸ் நிலைய மூடப்பட்ட பொலிஸ் நிலையம்

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழவூரில் 13 பொலிஸாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையம் 3 நாட்களுக்கு மூடப்பட்டது.

பழவூரில் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்குமுன் பொலிஸ் உதவி ஆய்வாளர் மற்றும் பொலிஸார் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருந்த நிலையில் அங்கு பணிபுரிந்த 13 பொலிஸாருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் பொலிஸ் நிலையம் மேலும் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாங்குநேரி பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையம் 3 நாட்களுக்கு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்