நடிகர் ரஜினி காந்தின் கட்சியின் பெயர் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நடிகர் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதன் விளைவாக கட்சிக்கு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்றை ரஜினி காந்த் தெரிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த பெயர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையகத்தில் இன்று பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கட்சி கொடி மற்றும் மாநில நிர்வாகிகளையும் தெரிவு செய்யவுள்ளனர். கட்சி கொடியில் வெள்ளை நிறம் பிரதானமாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே கட்சி பெயரை அறிவித்த நாள் முதல் ஒவ்வொரு தெருவிலும் கட்சியின் பெயரை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.