இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்துள்ளார். புருலியாவில் பொதுக்கூட்டத்தில் தாம் பேச இருப்பதாகவும் அந்தப் பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் செல்லவிருப்பது குறித்து குறிப்பிட்ட மோடி, கரீம்கஞ்ச் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
அஸ்ஸாமில் வளர்ச்சிப் பணிகள் தொடர மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்