Sunday, September 19, 2021

இதையும் படிங்க

பால்மாவின் விலை அதிகரிக்கப்படுமா ?

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டள்ள நிலையில் பால்மா இறக்குமதி நிறுவனங்களால் அதன் விலையை அதிகரிப்பதற்கு தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த...

இந்தியா -ஸ்ரீநகரில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி!

ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு...

சர்வதேச தலையீடுகளை அனுமதிப்பதில்லை என்பதே அரசாங்கத்தின் கொள்கையாம்!

நாட்டின் சுதந்திரம், அபிமானம் ஆகியவற்றின் மீது தலையிட சர்வதேசத்திற்கோ, சர்வதேச நிறுவனங்களுக்கோ இடமளிப்பதில்லை என்பது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மகிழ்ச்சியாம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை...

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்!

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை...

பயணக்கட்டுப்பாடு அமுலில் இருப்பதால் ஏற்பட்டுள்ள நன்மை! | விசேட வைத்திய நிபுணர்கள்

 நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது என்று விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

ஆசிரியர்

இந்தியா -31 மசோதாக்களை நிறைவேற்ற முடிவு!

புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடைபெறும்.

இந்த கூட்டத்தொடர் வழக்கம் போல காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் தற்போது 539 எம்.பி.க்.கள் உள்ளனர். கடந்த வருடம் பாராளுமன்றம் கூடியபோது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக எம்.பி.க்கள் குறிப்பிட்ட இடங்களில் அமர வைக்கப்பட்டனர்.

தற்போதும் மக்களவை இருக்கைகளில் 280 எம்.பிக்கள் அமர வைக்கப்படுகிறார்கள். மீதமுள்ள 259 எம்.பி.க்கள் பார்வையாளர்கள் மாடத்தில் அமர வைக்கப்படுவார்கள்.

இதன் காரணமாக பாராளுமன்ற கூட்டத்தொடரை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதுபோல 6 அவசர சட்டங் களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் 19 அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சமயங்களில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறும். அரசின் முக்கிய கொள்கை அறிவிப்புகளை இந்த கூட்டத்தொடரில் வெளியிட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிரான பல முக்கிய விவகாரங்களை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகாரில் பிரான்சில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பது, விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவை குறித்து எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்திலும் இந்த கோரிக்கையை காங்கிரஸ் கட்சி எழுப்ப உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் கேள்வியை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர மாநில வாரியாகவும் இடம் பெற்றுள்ள கட்சிகள் தனது மாநில கோரிக்கையை வலியுறுத்தி இந்த கூட்டத் தொடரில் கோ‌ஷங்களை எழுப்புவார்கள் என்று தெரிகிறது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் பிரச்சனையை எழுப்புவார்கள் என்று தெரிகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.

இதனால் பாராளுமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெறுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை பயனுள்ள வகையில் நடத்தி முடிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பாராளுமன்ற மேல்சபையை சிறப்பாக நடத்துவது குறித்து துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் மேல்சபை நடவடிக்கைகள் சுமூகமாக நடக்க எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் இன்று பகல் 11 மணிக்கு பாராளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர். மழைக்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பாராளுமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு சபாநாயகர் ஓம்பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் மக்களவையில் எத்தகைய விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது.

இதற்கிடையே பாரதிய ஜனதாவின் நிர்வாக குழு கூட்டமும் இன்று டெல்லியில் நடக்கிறது. அதில் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுவது பற்றி பேசப்படுகிறது.

மற்றொருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டமும் டெல்லியில் நடக்கிறது. காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தையும் சோனியா கூட்டி உள்ளார். சோனியா காந்தி காணொலி காட்சி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். எத்தகைய பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்படுகிறது. எல்லா கட்சிகளும் இன்று அடுத்தடுத்து ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதால் டெல்லி அரசியலில் விறுவிறுப்பான சூழ்நிலை உருவானது.

இதையும் படிங்க

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக பரீசிலனை செய்ய வேண்டும்!

அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? | நிலாந்தன்

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியா -ஸ்ரீநகரில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி!

ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு...

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்!

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை...

தமிழகத்தில் இன்று முதல் 2ஆவது கட்ட மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 12ஆம் திகதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி...

மேலும் பதிவுகள்

புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை!

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அனுப்பிய கடிதத்தில் விடுதலைப் புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜெனிவா...

இலங்கைக்கு அனைத்து நலன்களையும் பெறுவதே ஜனாதிபதியின் நிலைப்பாடு!

சகல சர்வதேச நாடுகளுடனும் சமமான நிபந்தனைகளுடன் நட்புறவுடன் செயற்படுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றி உலகளாவிய ரீதியில் நாட்டுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து நலன்களையும் உச்ச அளவில் பெற்றுக்கொள்வதற்கு...

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கைக்கு விஜயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே...

வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு தரும் அற்புதமான கீரைவகை!

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும். https://youtu.be/s0JVv_R6GVo

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களை தன் வசம் ஈர்த்தவர்.

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.2 கோடியை தாண்டியது!

வாஷிங்டன்,உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன்...

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

துயர் பகிர்வு