ஒரு பெரும் போராட்டத்தின் பின் இந்த வருட மே மாதம் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் என்று ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 7 கைதிகளான பேரறிவாளன் , நளினி , முருகன் , ராபட் பயஸ் , சாந்தன் , ரவிசந்திரன் , ஜெயக்குமார் ஆகிய கைதிகளுக்கும் விடுதலை 30 வருடங்களுக்கு பிறகு வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பானது உயர் நீதி மன்றத்தின் தன்னிச்சையான தீர்ப்பாக அமைய பெற்றுள்ளதாக மத்திய அரசு இன்று குற்றம் சாட்டியுள்ளது.
இவர்களின் விடுதலையை தமிழகத்தின் பல கட்சிகள் வரவேற்ற நிலையில் சில கட்சிகளும் தனி நபர்களும் இதை வெளிப்படையாக ஊடகங்களில் விமர்சித்து வந்தனர். குறிப்பாக அனுசுயா என்பவர் பல ஊடகங்களில் நளினியை அவர் சார்ந்தவர்களையும் விடுதலை தொடர்பிலும் பல மோசமான விமர்சனங்களை தெரிவித்திருந்தமை இந்த இடத்தில் குறிப்பிட்ட வேண்டிய ஒன்றாகும்.
அப்படி இருக்க காங்கிரஸ் கட்சியும் ஆரம்பத்திலேயே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது .அதனை தொடர்ந்து இன்று உயர் நீதி மன்றத்தில் மத்திய அரசும் நாட்டின் பிரதமர் மரணம் தொடர்பில் தீர்ப்பு வழங்கும் போது எவ்வாறு தம்மை ஒரு தரப்பாக எடுக்காது உயர் நீதி மன்றம் இந்த முடிவை எடுக்கலாம் என்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி உள்ளது.