சர்ச்சை மன்னன் ராம் தேவ்

இந்தியாவின் பல சர்சைக்களின் மன்னனாக அனைவராலும் கூறப்படும் ராமதேவ் பெண்களை பற்றி பேசி மீண்டும் ஒரு சர்ச்சசையில் சிக்கியுள்ளார்.

யார் இந்த ராம் தேவ் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும் மூச்சசுப்பயிற்சி ,யோகா , ஆயுர்வேதங்களில் கை தேர்ந்த யோகியாகவும் ஒரு சாரரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் .

இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கருதப்படுகிறது.

இப்பெருமைகளுக்குரிய ராமதேவ் மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார். அது என்னவென்றால் “பெண்கள் புடவையில் அழகாக இருப்பார்கள் அவர்கள் சல்வாரிலும் அழகாக இருப்பார்கள் அதை போல் எதுவும் இல்லாமலும் அழகாக இருப்பார்கள் “

இந்த கருத்து சமூக வலைத்தலங்களில் பெரிதும் அனைத்து சாரரால் விமர்சிக்கப்பட்டு வந்தது பெண்கள் அமைப்புகளுக்கு இவரின் இந்த கருத்துக்கு எதிராக பல பதிவுகளை இட்டு வரும் நிலையில் இன்றைய தினம் மன்னிப்பு கடிதத்தை மகாராஷ்டிரா ஆணையக தலைவருக்கு அனுப்பியுள்ளார்

ஆசிரியர்