பலராலும் விமர்சனங்களை பெற்று வரும் நிகழ்வாக பார்க்கப்படுவது மேயர் பிரியா முதலமைச்சரின் வாகனத்தில் தொங்கி சென்றமையே ஆகும்.
மேயர் பதவி என்பது தமிழக அரசியலில் மிக முக்கியமானதாகப் பார்ர்க்கப்படுகிறது. இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னாள் மேயர்களாக இருந்தவர்களே
முதல் முறையாக பட்டியலினப் பெண்களுக்கு சென்னை மாநகராட்சியின் மேயர் பதவியை பல போட்டிகளின் கீழ் பெற்றவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தியே பிரியா ஆவார் .
மேண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடத்தை முதலமைச்சர் காண சென்ற போது அவரின் காரில் தொங்கி சென்றமைக்கான விளக்கத்தினை பிரியா இவ்வாறாக கூறியிருந்தார்
” முதலமைச்சர் புயலின் பொது உண்டான பாதிப்பினை காண இரண்டு பகுதிகளுக்கு விஜயம் சென்றிருந்தார் முதல் பகுதியை கண்டு விட்டு பின் இரண்டாம் பகுதிக்கு செல்ல இருந்தார். எனவே அவருக்கு முன் அந்த பகுதியில் இருக்க வேண்டிய தேவை எனக்கு இருந்தமையால் அவ்வாறு சென்றேன். “
எனினும் சமூக ஆர்வலர்கள் இது தொடர்பில் புகார்களை கூட கொடுத்திருந்தார்கள்.மேலும் இவருடன் சேர்ந்து கான்வாயில் பயணித்த ஜகன்தீப்சிங்க்பேடி , எம் . எல்.ஏ எபினேஷ் ஆகியோர் பெயரிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மேயர் இவ்வாறு செய்வது அனைவருக்கும் வெறுப்பிலும் மேலும் மு.கே.ஸ்டாலின் ஏன் இதை கவனிக்கவில்லை என்றும் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது .