தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் தமிழக கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக ஒகேனக்கல் வனப்பகுதி உள்ளது.
தண்ணீர், உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம்.
இந்த நிலையில், கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீரை தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில், ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒரே நாளில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
அன்னியாலம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தம்மா அந்த வழியாக நடந்து சென்றபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
அத்துடன், தாசரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வதம்மாவும் யனை தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், அன்னியாலம், தாவரக்கரை, தாசரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் யானையை காட்டுக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.