பிரிட்டன் அரசின் தடுப்பூசி கண்டுபிடிப்பு குழுவின் மூத்த உறுப்பினர் ஜான் பெல் (John Bell) கொரோனா தடுப்பூசி சோதனைகள் வரும் ஆகஸ்ட் மாதமளவில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
கொரோனா தடுப்பூசி சோதனையை மனிதர்களிடம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.
தடுபூசி கண்டுபிடிப்பது என்பது முக்கியம் அல்ல என்ற அவர் அதன் பலன் எந்த அளவுக்கு இருக்கும் என்பதே இப்போது விஞ்ஞானிகளின் கவலையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள், எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் எந்த விதமான மரபியல் மாற்றங்களுடன் உருவெடுத்தாலும் அதை தடுக்கும் வகையில் தற்போது ஆய்வுகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.