கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காவல்துறையினரால் பதிவுசெய்யப்பட்ட நாய் தாக்குதல்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட 22,000 சம்பவங்களில் கட்டுப்பாட்டை மீறிய நாய்களால் மனிதர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, 2018 இல், 16,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் இங்கிலாந்தின் நாய்களின் எண்ணிக்கை 15% மட்டுமே உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் சிறப்பு நடவடிக்கையின் காரணமாக, ஆபத்தான நாய்கள் பற்றிய அதிக அறிக்கைகளை தாங்கள் பார்த்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
“ஒரு நபர் அல்லது மற்றுமொரு நாய்க்கு மரணம் அல்லது காயத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் காவல்துறையால் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், மற்ற சம்பவங்கள், உதாரணமாக நாய் மற்றொரு விலங்கைத் தாக்குவது, அல்லது தொல்லை கொடுப்பது போன்றவை இருக்க வேண்டியதில்லை” என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதேவேளை, புதிய செல்ல நாய்களின் அதிகரிப்பினால் நாய்களின் தாக்குதல்கள் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகரித்திருக்கலாம் என்று பிபிசியின் புள்ளிவிவரங்கள், தெரிவிக்கின்றன.