இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.55 மணியளவில் Sittingbourne இல் தாக்குதல் பற்றி பொலிஸாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காயங்களுக்கு சிகிச்சை பெற இலண்டன் மருத்துவமனைக்கு இளம் பெண் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் நிலையான நிலையில் இருப்பதாக கென்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்தும் நோக்கில் தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த தகவல், சிசிடிவி அல்லது காட்சிகள் உள்ளவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.