நுண்ணுணர்வினாற் பெருங் கொடையர்
கலுழ் நனையால் தண் தேறலர்
கனி குய்யாற் கொழுந் துவையர்
என்ற பாடல் வரிகள் புறநானூறில் 360-வது பாடலில் 3-5 வரியில் உள்ளது.
சங்க காலத்தில் துவையலை ‘துவையர்” என்றழைத்தனர். சங்க காலத்தில் கள்ளானது பலராலும் அருந்தப்பட்டது. மன்னனும் தன்னைத் தேடி வருவோருக்கு கொடையுடன் கள்ளும் தருவான் என்று இப்பாடலின் மூலம் தெரிகிறது. கள்ளுடன் தாளிக்கப்பட்ட துவையலை அளிப்பானாம் மன்னன் என்று அறிய முடிகிறது.
நாட்டை ஆளும் மன்னன் அதிக சினமின்றி தெளிந்து பல கேட்டு, பணிவான சொல்லும் பலருக்குப் பயன் பெறும் செயல்களைச் செய்பவனாக இருக்க வேண்டும் என்று இப்பாடலைப் பாடிய சங்க வருணர் என்னும் புலவர் கூறுகிறார்.
சங்க காலத்தில் நம் மக்கள் புளிப்பு சுவை உணவை விரும்பி உண்டுள்ளனர். நம் தமிழர்களுக்கு புளிப்புச்சுவையின் மீது மோகம் இருந்ததை புறநானூறு கூறுகின்றது.
தயார் செய்த துவையலை நெய்யில் கடுகு உளுந்து சேர்த்து தாளித்து வதக்கியுள்ளனர். மிகுதியாய் சங்க காலத்தில் தேங்காய் சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆக தேங்காய் சேர்த்து துவையல் செய்திருப்பர் என அறிய முடிகிறது. கூடவே என்னென்ன சேர்த்து துவையல் செய்திருப்பார்கள் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
முற்றிய தேங்காய் – 100 கிராம் (துருவியது) மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு சீரகம் – 1 டீஸ்பூன்
புளி – 1/2 எலுமிச்சைஅளவு தாளிக்க
மிளகு – 5-7 எண்ணிக்கை கடுகு – 1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி – 1 டீஸ்பூன் உளுந்து – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு நெய் – 1/2 டீஸ்பூன்
செய்முறை :
தேங்காய், சீரகம், மிளகு, கொத்துமல்லி, புளி, கறிவேப்பிலை, மல்லித்தழை போதுமான உப்பைச் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து, கடுகு உளுந்து சேர்த்து தாளித்து, நன்கு வதக்கி இறக்கவும். சுவையான நம் முன்னோர் செய்த துவையல் தயார்.
குறிப்பு :
Ø சங்க காலத்தில் மக்கள் மிகுந்த புளிப்புச் சுவையை விரும்பி உண்டார்கள் எனப் பலப் பாடல்களில் காண முடிகிறது.
Ø உளுந்தை தோல் அகற்றாமல் பயன்படுத்தியுள்ளனர். தோலில் நார்ச்சத்து நிறைய உள்ளது.
தொடரும்…
சமையல் குறிப்பு கலைஞர் பி பிரியா பாஸ்கர்
முன்னைய பகுதிகள்:
http://www.vanakkamlondon.com/sanga-kaala-samaiyal-priya-basker-part-1-07-22-19/
http://www.vanakkamlondon.com/sanga-kaala-samaiyal-priya-basker-part-2-07-27-19/