வவுனியா நகரில் உள்ள வவுனியாகுளத்தில் மீன்கள் இறந்து மிதக்கின்றமையால் அப்பகுதியில் சுகாதார பிரச்சனை எழுந்துள்ளது.
வவுனியாயில் கடந்த சில மாதங்களாக நிலவிய வரட்சி காரணமாக வவுனியா குளத்தின் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்து குளத்தின் பெரும் பகுதி உலர்ந்து காணப்படுகின்றது.
குறுகிய பகுதிலேயே நீர் காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த நீர்ப்பகுதியில் பரவலாக மீன்கள் இறந்து நீரில் மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார பிரச்சனையும், சுவாசம் சம்மந்தமான பிரச்சனைகளும் எழுந்துள்ளது.
நீரில் மீன்கள் இறந்து மிதக்கின்ற போதும் குறித்த குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுவோர் தொடர்ந்தும் தமது மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இக்குளத்து மீனை உண்பவர்களுக்கும் நோய் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது.