அரசியலமைப்பின் பிரகாரம் 2020 க்குப்  பின் இலங்கையின் அதிகாரமிக்கவராக பிரதமரே திகழ்வார் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால மைத்திரிபால சிறிசேன  தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது தேசிய சம்மேளனம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது. இந்நிகழ்வில் விஷேட உரையினை நிகழ்த்திய போதே  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஆட்சியை நானே உருவாக்குவேன்  என்றும் இதன்போது மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி  நாட்டில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாமைக்கு பிரதமரே காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.