செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

1 minutes read

நடிகர் ஏகன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

தேசிய விருது பெற்ற படைப்பாளியான இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ எனும் திரைப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ‘குட்டி புலி’ தினேஷ், லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் டி. அருளானந்து தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 20 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் மண் மணம் மாறாமலும், தமிழ் சமூகத்தில் உறவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தின் பின்னணியிலும் இப்படத்தின் கதை உருவாகி இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ ஏற்படுத்தியிருக்கிறது.

குறைந்த முதலீட்டுப் படங்கள், அறிமுக நடிகர்களின் படங்கள், கிராமீய பின்னணியிலான படங்கள் என பலவகையினதான படங்கள் இன்றைய திகதியில் தமிழ் ரசிகர்களின் கவனத்தை கவரவேண்டும் என்றால் அந்த படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றிருக்கவேண்டும்.

அத்துடன் அப்படத்தைப் பற்றிய நேர்நிலையான விமர்சனத்தை விளம்பர உத்தி மூலம் மக்களை சென்றடைய வேண்டும்.

இந்த உத்திகளை ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படமும், படக்குழுவும் கடைபிடிப்பதால் இந்த படமும தமிழ் ரசிகர்களின் கவனத்தை கவரும் என கூறலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.