இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திருகோணமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
திருகோணமலைக்கு இன்று (வியாழக்கிழமை) சென்ற அவர், திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்தோடு அங்கு பிரசித்திபெற்று விளங்கும் இராவணன் கல்வெட்டையும் பார்வையிட்டார்.
இதேவேளை, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று வவுனியாவிற்கு சென்றிருந்தார். இதன்போது வவுனியாவில் அமைக்கப்படவுள்ள கண் வைத்தியசாலைக்கான அடிக்கல்லை அவர் நாட்டி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.