தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் எமது கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி அவர்களுக்கும் கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இதேவேளை தேசிய ரீதியில் முதலிடத்தை கொழும்பு றோயல் கல்லூரியை சேர்ந்த சு. அனந்த நாராயணன் சர்மாவும் மூன்றாம் இடத்தை மத்திய மாகாணத்தை சேர்ந்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி பி. லக்சிலாவும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவி பிரபாகரன் தமிழ்விழியின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். இவருக்கு வணக்கடம் லண்டனும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்