நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகிய வருடாந்த பொங்கல் விழா தொடர்ச்சியாக 9 நாட்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், ஒலு மடு பிள்ளையார் ஆலயத்திலிருந்து காவடிகள் வந்திருந்தன.
இந்நிலையில் இன்று இரவு மடப்பண்டம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் பொங்கல் பொங்கி நிகழ்வுகள் அனைத்தும். நிறைவு பெறவுள்ளன.
இன்றைய இறுதி நாள் பூஜை நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள், மற்றும் யாழ்பல்கலைகழக மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.