யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அடிப்படை வசதிகள் சீர்குலைந்திருந்த நிலையில் 2015ம் ஆண்டு அதன் பணிப்பாளராக மருத்துவர் சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்.
அவரது விடா முயற்சி, கடின உழைப்பால் யாழ் போதனா வைத்தியசாலை திறம்பட இயங்குகின்றது. யுத்த காலத்திலும் இவரது பணி பாராட்டப்பட்டது.
இந்நிலையில் ஊழலற்ற நிர்வாகத்துக்காக இ்வ்வாண்டுக்குரிய நேர்மையான அரச அலுவலரை காெரவிப்பதற்கான குறுஞ்செய்தி அனுப்பும் தேர்தலில் மருத்துவர் சத்தியமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்தல் டிசம்பர் 06ம் திகதி முடிவடைய உள்ளது. அவருக்கு பெருமளவில் வாக்களிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறு வாக்களிப்பது, என்பது தொடர்பில் கீழே காணப்படும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. எமது பேராதரவை அவருக்கு வழங்கி வெற்றி பெறச் செய்வோம்.
இதேவேளை மருத்துவர் சத்தியமூர்த்தி, முள்ளிவாயக்கால் போர் காலத்திலும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் மருத்துவப் பணி புரிந்தார். இதனால் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு இலண்டனை தளமாகக்கொண்டு இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு “மண்ணின் மைந்தன்” எனும் விருதினை இலண்டனில் வைத்தது வழங்கியிருந்தது.
ICON 5 எனும் குறுஞ்செய்தியை 0094115882626 எனும் இலக்கத்துக்கு அனுப்புவதன்மூலம் வாக்களிக்க முடியும்.