இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பல்ல..!’ எனத் தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் குற்றவியல் நீதிமன்றம், இயக்கத்திற்கு நிதிசேகரித்தமை தொடர்பாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 12 பேரையும் வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்திருப்பது பெரும் நம்பிக்கையையும் தருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் எந்நாளும் போற்றி வணங்கக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பாக இது அமைந்துள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று தொடர்ச்சியாகச் சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் போராடி உலக நாடெங்கும் இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடைச் சங்கிலியைத் தகர்த்தெறிய உறுதியேற்போம் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.