கிளிநொச்சி ஜெயந்திநகர் சன சமூக நிலையத்தின் நூலக திறப்பு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று இடம்பெற்றது
கிளிநொச்சி ஜெயந்திநகர் சன சமூக நிலையத்தின் நூலக திறப்பு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல் 2 மணியளவில் ஜெயந்திநகர் சனசமூக நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. நூலகத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு நூலகம் நாடா வெட்டி திறந்த வைக்கப்பட்டது, நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்து கொண்டார். இதன்போது கிராமத்தில் சேவையாற்றி முதிர்ச்சி அடைந்த மூத்த பிரஜைகள் கௌரவிக்கப்பட்டதுடன் கிராமத்தினல் கல்வியில் சிறப்பு தேர்ச்சிகளை பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச மக்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.