மலையகத்தின் கல்வி செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது நுவரெலியாவில் இரு பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நுவரெலியா- சந்ததேன்ன என்ற இடத்தில் அமைந்துள்ள இலங்கை வனவியல் நிறுவனம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வியை வழங்க முழுமையான பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும் என அவர் கூறினார்.
அதேபோன்று மேலுமொரு தனி பல்கலைக்கழகம் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பகுதியில்அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.