செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘தமிழ் மக்களுக்குச் சோறும் தண்ணியும் தான் முக்கியம்’-அலுத்கமகேயின் கருத்துக்குக் கண்டனம்

‘தமிழ் மக்களுக்குச் சோறும் தண்ணியும் தான் முக்கியம்’-அலுத்கமகேயின் கருத்துக்குக் கண்டனம்

2 minutes read

தமிழ் மக்களுக்குச் சோறும் தண்ணியும் தான் முக்கியம் என்று கூறிய மஹிந்தானந்த அலுத்கமகேயின்  கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள  வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம்,  மஹிந்தானந்த அழுத்தமே தமிழர்களைச் சந்திப்பதற்காகக் கூறி யாசகரை சந்தித்துவிட்டா இவ்வாறான கருத்துக்களைக் கூறுகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சி.வி.கே. சிவஞானம் இன்று நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்தானந்த அலுத்கமகேயின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அலுத்கமகேயின்  கருத்து ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமானப்படுத்தும் வகையிலும் கொச்சைப்படுத்தும் வகையிலும்  அமைந்துள்ளது.இவ்வாறான கருத்துக்குத் தமிழ் மக்கள் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழினம் பல ஆண்டுகளாகப் போராடியது சோற்றுக்கு அல்ல வடக்கு கிழக்கில் போராட்ட காலத்தில் பொருளாதாரத் தடைகளை விதித்த போது கூட எமது மக்கள் அந்தத் தடைகளையும் தாண்டி வாழ்ந்தார்கள்.

அவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் சோறும் தண்ணியும் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் எனக் கூறுவார் ஆயின் அந்தக் கருத்தைத் தமிழ் மக்களைச் சந்தித்துக் கூறியதாக இருக்காது தமிழ் மக்களைச் சந்திப்பதற்கு பதிலாக யாரோ யாசகரைச் சந்தித்து விட்டுத்தான் காரணங்களைத் தெரிவிக்கிறார்.

எனவே தமிழ் மக்கள் சோற்றுக்கும் தண்ணீக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்ற கருத்துக்களை இனி தவிர்த்துக்கொள்ள வேண்டும் .

மேலும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த விமல் வீரவன்ச கடந்த ஆட்சியில் வீட்டையும் வாகனத்தையும் பெற்றுக் கொண்டதைத் தவிரத்சம்பந்தன் தமிழ் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துச் சென்றிருக்கின்றார்.

விமல் வீரவன்ச முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் கடந்த ஆட்சியில் புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சியின்போது ஒக்டோபர் சதிப்புரட்சி மூலம் அரசியல் தீர்வை தடுத்து நிறுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது நீங்களும் உங்கள் மஹிந்த தரப்புக்களும் தான் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இரண்டு வருடங்களுக்கு மேலாக அவருக்கான உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது பின்னர் காலப்போக்கில் அவருக்கு  உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டது.

அது நிரந்தரமான வீடு அல்ல. அது அவருடைய பெயரில் எழுதிக் கொடுக்கப்படவில்லை இது பரிசு அல்ல வழமையாக அனைவருக்கும் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லமே.

சம்பந்தன் தற்போது பாவித்துக் கொண்டிருக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து  அடுத்த தேர்தலுக்கு முன்னர் நிச்சயமாக விடுவிப்பார்.

அவர் அதற்காக உரிமை கோரப் போவதில்லை அது சாதாரண உத்தியோகபூர்வ இல்லம் மட்டுமே அவர் ஒன்றும் வீடு அல்லாதவர் அல்ல எனவே இவ்வாறான விசமத்தனமான பிரச்சாரங்களை மஹிந்த தரப்பு  நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More