திருநெல்வேலி- சிவன் அம்மன் கோவில் பகுதியில் பல்கலைகழக மாணவியை வழிமறித்த கொள்ளை கும்பல் மாணவியின் பணம் மற்றும் கைதொலைபேசி உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றிருக்கின்றது.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.சிங்கள மாணவி ஒருவா் வெளியே சென்றுவிட்டு தனது விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சைக்கிள்களில் நின்ற வழிப்பறி கொள்ளையா்கள் குறித்த மாணவியை வழிமறித்து அடாத்தாக மாணவியில் கைப்பையில் இருந்த விலை உயா்ந்த தொலைபேசி, 7500 ரூபாய் பணம், வங்கி அட்டைகள், பல்கலைகழக மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியன பறித்து செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடா்பாக மாணவி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாா்.