ஆர்ப்பாட்டக்காரர்களை சமாளிப்பதிலேயே தனது நேரங்கள் விரயமாவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை கேட்பதில் நேரம் போவதால், தேசிய கொள்ளைகள் மற்றும் இராஜதந்திர விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆர்ப்பாட்ட பிரச்சினைகளை அமைச்சுக்களின் செயலாளர்கள் பொறுப்பேற்று கண்காணிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு என தனியான இடம்மொன்றை ஜனாதிபதி ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.