கடந்த ஒரு மாத காலமாக சவுதி அரேபியா பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வரும் 140 ற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்களாகிய நாங்கள் கோடைகால விடுமுறையில் நாடு திரும்ப முடியாத நிலையில் நிர்கதிக்குள்ளாகி இருக்கின்றோம்.
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தோடு கடந்த மூன்று மாத காலங்களாக நாடு திரும்புவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டும், பல கோரிக்கைகளை முன்வைத்தும் எந்தவொரு சாதகமான முடிவும் எட்டாத நிலையில் மேன்மை மிகு ஜனாதிபதி கோடாபாய ராஜபக்க்ஷ அவர்களது கவனத்திற்க்கு இச்செய்தியை கொண்டு வருகின்றோம்.
எனவே வெளிநாடுகளில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் ஜனாதிபதி அவர்களின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பல சிரமங்களுக்கு மத்தியில் நாடு திரும்ப எதிர்பார்த்திருக்கும் எங்களையும் உடன் நாட்டுக்கு அழைத்துவர உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குமாறும் உங்களது மேலான சேவைகளில் எங்களையும் இணைத்துக் கொள்ளுமாறும் தயவாய் வேண்டிக்கொள்கின்றோம்.
அத்தோடு கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் மேன்மை மிகு ஜனாதிபதி அவர்கள் இன மத வேறுபாடின்றி மக்களை பாதுகாப்பதற்காக மேற்கொண்டு வரும் சிறப்பான வேளைத்திட்டங்களுக்கு இலங்கை மாணவர்கள் சார்பாக நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.