இலங்கையில் பிரதான அரச வங்கி மற்றும் தனியார் வங்கி ஒன்றில் ஒரு கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கடன் அட்டைகள் மூலம் கொள்ளையடிக்கும் இந்த கும்பலலை தேடி குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச ஹெக்கர்கள் மற்றும் இலங்கை குழுவொன்று இணைந்து மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுகின்ற இந்த நடவடிக்கையில் இரண்டு வங்கிகளிலும் பல வருடங்களாக பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.குறித்த இரண்டு வங்கிகளும் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய குற்ற விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்களுக்கு குறித்த வங்கிகளில் வழங்கப்படும் கடன் அட்டை மூலம் பொருட்கள் பெற்றுக் கொண்டு இந்த மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி ஜப்பான் சென்ற குழுவொன்று இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.
கடன் அட்டைகளில் பணம் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டதன் பின்னர் குறித்த நாடுகளில் இருந்து வரும் முறை இந்த வங்கிகளில் இல்லை. அதற்காக வங்கி அதிகாரிகளை ஈடுபடுத்தி தரவுகளை கணக்கில் சேர்க்கும் முறையையே இந்த வங்கிகள் இரண்டு கடைபிடித்து வருகின்றது.அவ்வாறு வங்கி அதிகாரிகள் இணைத்து தரவுகளை சேர்க்கும் போது ஏற்படும் தாமதங்களை அடையாளம் கண்டு இந்த மோசடி குழுவினர் பல லட்சம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
கணக்குகளில் பணம் குறையும் மோசடிகளை புரிந்து கொண்ட போதிலும் அதனை வங்கிகளினால் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. இரகசிய எண்களின் தவறினால் இந்த சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
வங்கி அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக இந்த நிதி மோசடி இடம்பெற்றமை உறுதியாகியுள்ளது.
மோசடிக்கு தொடர்புடையவர்களை அடையாளம் காணுவதற்காக சர்வதேச வங்கிகளின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.