இவ்வருடம் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும், பரீட்சார்த்திகள் ஒன்லைன் முறை மூலம் மாத்திரம் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தங்களது விண்ணப்பங்களை தாங்களே பூர்த்தி செய்து, இறுதிப் பகுதியை அச்சிட்டு பூர்த்தி செய்து தபாலில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணபங்களும் ஒன்லைன் முறை மூலமே கோரப்பட்டுள்ளதோடு, அது பாடசாலையின் அதிபர் ஊடாக மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் ஒன்லைன் முறை மூலம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வருடம் கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளிடமிருந்து, ஜூலை 22 முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இம்முறை பரீட்சைக்காக, அனைத்து பரீட்சார்த்திகளும், ஒன்லைன் (Online) முறை மூலம் மாத்திரம் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் (www.doenets.lk) இணையத்தின் மூலமாக (onlineexams.gov.lk/onlineapps) உரிய வழிமுறைகளை கவனமாகப் படித்து அதன்படி விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து ஒன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், இறுதியாக பெறப்படும் பகுதியை அச்சிட்டு, அதன் மீதமுள்ள பகுதிகளை பூர்த்தி செய்து தபால் மூலம், இலங்கையின் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டல்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்ப்பட்டுள்ளதோடு, குறித்த இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான வழிகாட்டல்களும் மேற்படி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய இணையத்தளத்திற்கு நேரடியாகச் சென்று உரிய விண்ணப்ப படிவங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் பகுதியை பிரதியெடுத்து, அதில் மீதமுள்ள பகுதிகளை பூர்த்தி செய்து தபால் மூலம், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.