பாதாள உலகக் குழுவினரை கைது செய்ய தென் மாகாணத்தில் சிறப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், பலரும் மீன்பிடிப்பது என்ற போர்வையில் கடலில் பலநாள் தரித்து நிற்கும் இழுவைப் படகுகளில் ஆழ்கடல்களுக்கு தப்பி ஓடுவதாக கூறப்படுகிறது.
இந்த பாரிய இழுவைப்படகுகள் சுமார் 02 மாதங்கள் கடலில் இருப்பதால், பாதாள உலக உறுப்பினர்கள் தப்பிக்க இந்த தந்திரத்தை பயன்படுத்துவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதாள உலக உறுப்பினர்கள் பல நாள் இழுவைப்படகுகளில் பதுங்கியிருப்பது குறித்த தகவல்களை காவல்துறையினர் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாகவும், இந்த கப்பல்கள் மீண்டும் கரையொதுங்கியவுடன் அவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.