கிளிநொச்சி கந்தன்குளத்தை பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த குளக்கட்டில் ஏற்பட்ட கசிவு தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த நீர்பாசன திணைக்களம், குளக்கட்டின் கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நேற்று நள்ளிரவு வரை பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொண்டிருந்தது.
எனினும் அந்த நடவடிக்கையினை முழுமையாக மேற்கொள்ள முடியாமல் நேற்று நள்ளிரவுடன் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மீண்டும் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் குளத்தை பாதுகாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆகையினால் கந்தன்குளத்தின் கீழ்பகுதியிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
571 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியின் பணிப்பிற்கமைவாக 7வது காலாட்படை மற்றும் 9வது சிங்க ரெஜிமன்ட் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.