அபிவிருத்தியை எதிர்ப்பார்த்து, வாக்களித்த தமிழர்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியை முன்னிருத்தி நாடாளுமன்றுக்கு தெரிவானவர்களும் இன்று அதனை பெற்றுக் கொடுக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆதவனின் நேருக்கு நேர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், தனது அமைச்சின் ஊடாக அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த வியாழேந்திரனுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், முடிந்தால் அப்போது செய்த அபிவிருத்தி திட்டத்தில் அரைவாசியினையாவது செய்து காட்டுமாறு தான் வியாழேந்திரனுக்கு சவால் விடுப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.