புத்தளம், இராஜாங்கனை பிரதேசத்தில் காரொன்று நீர் நிறைந்த கால்வாயொன்றுக்குள் வீழுந்து விபத்துக்குள்ளானதில் 08 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (30) காலை இடம்பெற்றுள்ளது. தந்தை, தாய் மற்றும் மூன்று மகள்மாருடன் பயணித்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் பெலிஅத்த பிரதேசத்திலுள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்று, இராஜாங்கனை, அடம்பனே பிரதேசத்திலுள்ள தமது வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இக்குடும்பத்தின் இளைய மகளே உயிரிழந்துள்ளார்.
வாகனத்தை செலுத்திய தந்தைக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.