செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகள் போதுமானதல்ல!

கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகள் போதுமானதல்ல!

1 minutes read

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளபோதிலும் , அவை எதிர்வரும் யூன் மற்றும் யூலை மாதங்களில் காலவதியாகிவிடும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார் .

கொவிட் பரவல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதோடு இதுவரையில் 9 இலட்சத்து 25 242 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

எவ்வாறிருப்பினும் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கு தற்போது கையிருப்பில் உள்ள அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் போதுமானதல்ல. இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளதோடு அஸ்ட்ரசெனிகா மாத்திரமின்றி சீனோபார்ம் , ஸ்புட்னிக் பைசர் உள்ளிட்டவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் இதன் போது சுட்டிகாடியுள்ளார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More