March 26, 2023 10:12 am

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மேல் மாகாணத்தில் வசிக்கும் எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை செலுத்தப்படாதவர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அதற்கமைய 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளோருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று முதல் மூன்று தினங்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தடுப்பூசியைப் பெறவுள்ளோர் 1906 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முற்பதிவினை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்