கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.
2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கியிருந்தார்.
குறித்த தேர்தலில் அவர் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்று இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, நவம்பர் மாதம் 18ஆம் திகதி அநுராதபுரத்தில் அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.