0
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயிருந்த நிலையில் நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
11 பேர் நீராட சென்றிருந்ததுடன், அவர்களில் 5 பேர் இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலேயே அவர்களுள் நால்வர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் காணாமல் போன நபரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.