செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை!

1 minutes read

மட்டக்ளப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நால்வர் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனை தொடர்பான கடித்தின் படி குறித்த வழக்கிற்கான நகர்த்தல் மனு நீதி மன்றில் இன்று சமர்ப்பிக்கப்படடவேளை ஏறா10ர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி கருப்பையா ஜீவராணி அவர்களினால் பிணை வழங்கப்பட்டள்ளது.

கடந்த2020 நவம்பர் 27,ம்,28,ம்,திகதிகளில், ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி சித்தாண்டி ஏறாவூர் மற்றும் ஜயங்கேணி போன்ற பகுதிகளைச் சேர்ந்தபேர் க.சோபனன், யோ.யோகேஸ்வரன் , வ.விவேந்த், க.ஜெகநாதன் ஆகியவர்ளே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் முகப் புத்தகத்தில் அரசினால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின் உருவம் அடங்கிய புகைப்படத்தினை பதிவிட்டதன் பிரகாரம் இவர்கள் ஏறாவூர் பொலிசாரினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் செய்யப்பட்டிருந்தனர்.

சுமார் 13 மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த நால்வர் சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கினங்க இன்று அவர்களுக்கு தலா 02 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்டடிவர்கள் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் ஏறாவூர் பொலிஸ் நிலைத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More