இலங்கையில் மனித உரிமைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக உலக நாடுகள் தடைகளை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற நிலையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை முரணாக காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான முன்னேற்றத்திற்கு உலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.
தமக்கான நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் ஐக்கிய நாடுகளையும் சர்வதேசத்தையுமே நம்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.